Pages

Friday, April 10, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 14





ௐ ஸேநாபதியே நம: ।(தேவ) சேனைக்கு தலைவனே
ௐ ஸகாரகாய நம: ।ஸ என்னும் ஒலி உருவினனே
ௐ ஸநாதநாயே நம: ।எப்போதும் இருப்பவனே
ௐ ஸித்³த⁴ரூபிணே நம: ।எப்போதும் தயாராக இருப்பவனே
ௐ ஸித்³த⁴த⁴ர்மபராயணாய நம: । 330சித்தர்களின் தர்மத்தை கைக்கொண்டவனே
ௐ ஆதி³த்யரூபாய நம: ।சூரியனின் உருக்கொண்டவனே
ௐ ஆபத்³க்⁴நாய நம: ।ஆபத்துகளை அழிப்பவனே
ௐ அம்ருʼதாப்³தி⁴நிவாஸபு⁴வே நம: ।அம்ருதகடலில் வசிப்பவனே
ௐ யுவராஜாய நம: ।இளவரசனே
ௐ யோகி³வர்யாய நம: ।உயர்ந்த யோகியே
ௐ உஷஸ்தேஜஸே நம: ।செவ்வான ஒளியுள்ளவனே
ௐ உடு³ப்ரபா⁴ய நம: ।நக்‌ஷத்திரம் போன்ற ஒளியுள்ளவனே
ௐ தே³வாதி³தே³வாய நம: ।தேவர்களுக்கு முந்தைய தேவனே
ௐ தை³வஜ்ஞாய நம: ।விதியையும் வருங்காலத்தையும் உணர்ந்தவனே
ௐ தாம்ரோஷ்டாய நம: । 340சிவந்த உதடுகளை உடையவனே
ௐ தாம்ரலோசநாய நம: ।தாமிரம் போல் சிவந்த கண்களை உடையவனே
ௐ பிங்க³லாக்ஷாயா நம: ।பொன் மஞ்சள் நிற கண்களை உடையவனே
ௐ பிஞ்ச²சூடா³ய நம: ।இறகை சூடியவனே
ௐ ப²ணாமணிவிபூ⁴ஷிதாய நம: ।நாக ரத்தினத்தை அணிந்தவனே
ௐ பு⁴ஜங்க³பூ⁴ஷணாய நம: ।நாகங்களை ஆபரணங்களாக அணிந்தவனே
ௐ போ⁴கா³ய நம: ।சுகங்களை அனுபவிப்பவனே
ௐ போ⁴கா³நந்த³கராய நம: ।சுகங்களால் ஆனந்தத்தை உண்டு செய்பவனே
ௐ அவ்யயாய நம: ।பிரிக்க முடியாதவனே
ௐ பஞ்சஹஸ்தேநஸம்பூஜ்யாய நம: ।ஐங்கரங்களால் பூஜை செய்யப்பட்டவன்
ௐ பஞ்சபா³ணேந ஸேவிதாய நம: । 350ஐந்து அம்புகளால் வணங்கப்பட்டவன்

 சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
326. ஸேனாபதி: தேவ ஸேனைகளுக்கு பதியானவன்.
327. ஸகாரக: பெயர்ச்சொல் வினைச்சொல் இவ்விரண்டுகளோடு கூடியவன்.
328. ஸனாதன: ப்ராசீனன் ; ஸனாதன முனிரூபன்.
329. ஸித்தருசி : சித்தர்களிடம் அன்பு கொண்டவன்.
330. ஸித்த தர்மபராயண: சித்தர்களின் தர்மத்தைக் கையாளுபவன்.
331. ஆதித்ய ரூப: சூர்யனின் உருவம் கொண்டவன்.
332. ஆபதக்ன: ஆபத்துகளைப் போக்கடிப்பவன். ஆபத்பாந்தவன்.
333. அம்ருதாம் போதி வாஸபூ : அமிர்தமாகிய பாற்கடலில் வசிப்பவன்.
334. யுவராஜ: இளவரசன்.
335. யோகிவர்ய: சிறந்த யோகி.
336. உஷஸ் தேஜா: காலையில் விளங்குபவன்.
337. உடுப்ரப: நக்ஷத்திரம் போன்ற சோபை உள்ளவன்.
338. தேவாதி தேவ:தேவர்களுக்கும் முந்திய தேவன்.
339. தைவக்ஞ: ஜோதிடன்.
340. தாம்ரோஷ்ட: சிவந்த உதடுகளை உடையவன்.
341. தாம்ர லோசன : சிவந்த கண்களை உடையவன்.
342. பிங்கலாக்ஷ: பொன் நிறமான கண்களை உடையவன்.
343. பிஞ்ச சூட : மல்லிகைப் பூவினைச் சூடியவன். மயிற்பீலியை சூடியவன்.
344. பணாமணி விபூஷித: நாகரத்தினம் அணிந்தவன்.
345. புஜங்கபூஷண:நாகங்களை பூண்டவன்.
346. போக சுக ரூபன்: போகர் என்ற ஸித்தரானவன்.
347. போகானந்தகர : போகத்தில் அல்லது போகர் என்ற ஸித்தருக்கு ஆனந்தத்தை உண்டு பண்ணுபவன்.
348. அபய: பயம் அற்றவன்.
349. பஞ்ச ஹஸ்தேன ஸம்பூஜ்ய: யானையால் பூஜிக்கப்பட்டவன்.
350. பஞ்ச பாணேன ஸேவித: மன்மதனால் வணங்கப்பட்டவன்.

No comments: