Pages

Monday, April 20, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 22





ௐ வீராராத்⁴யாய நம: ।வீரர்களால் பூஜிக்கத்தக்கவனே
ௐ வக்ராக³மாய நம: ।மடங்கி நடப்பவனே
ௐ வேதா³ங்கா³ய நம: ।வேதங்களை அங்கமாக கொண்டவனே
ௐ வேத³பாரகா³ய நம: ।வேதங்களை கொண்டாடுபவனே
ௐ பர்வதாரோஹணாய நம: । 530மலை மேல் ஏறியவனே
ௐ பூஷ்ணே நம: ।சூரியனே
ௐ பரமேஶாய நம: ।எல்லாவற்றுக்கும் மேலான இறைவனே
ௐ ப்ரஜாபதயே நம: ।பிரஜைகளின் தலைவனே
ௐ பா⁴வஜ்ஞாய நம: ।உணர்ச்சிகளை அறிந்தவனே
ௐ ப⁴வரோக³க்⁴நாய நம: ।பிறப்பெனும் பிணி தீர்ப்பவனே
ௐ ப⁴வஸாக³ரதாரணாய நம: ।பிறப்பெனும் கடலை தாண்டுவிப்பவனே
ௐ சித³க்³நிதே³ஹாய நம: ।தகன அக்னி உருவினனே
ௐ சித்³ரூபாய நம: ।ஞான வடிவினனே
ௐ சிதா³நந்தா³ய நம: ।ஞான ஆனந்த வடிவினனே
ௐ சிதா³க்ருʼதயே நம: । 540ஞானத்தை உருவாக்குபவனே
ௐ நாட்யப்ரியாய நம: ।நடனத்தில் பிரியம் உள்ளவன்
ௐ நரபதயே நம: ।மனிதர்களின் தலைவனே
ௐ நரநாராயணார்சிதாய நம: ।நர நாராயணர்களால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ நிஷாத³ராஜாய நம: ।வேடர்களின் அரசனே
ௐ நீஹாராய நம: ।மூடுபனியே
ௐ நேஷ்ட்ரே நம: ।
வேள்வியை செய்து வைப்போரில் அங்கம் வகிக்கும் நேஷ்டா என்பவனே
ௐ நிஷ்டுரபா⁴ஷணாய நம: ।கடும் சொற்களை பேசுபவனே
ௐ நிம்நப்ரியாய நம: ।பள்ளமான இடங்களை விரும்புவனே
ௐ நீலநேத்ராய நம: ।நீலக்கண்ணனே
ௐ நீலாங்கா³ய நம: । 550நீலமான அங்கங்களை உடையவனே


  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

 
528. வீராராத்ய: போர் வீரர்களால் பூஜிக்கத் தகுந்தவன்.
529. வக்ராகம: கோணலான நடை போடுபவன்.
530. வேதாங்க: வேதங்களை அங்கமாக கொண்டவன்.
531. வேதஸஞ்சர: வேதத்தில் கூறப்பட்டுள்ளவன்.
532. பர்வதா: ரோஹண மலைகளில் ஏறுபவன்.
533. பூஷா: சூரியன்.
534. பரமேச: மேலான இறைவன்.
535. ப்ரஜாபதி: படைப்பவன், பிரம்ம ரூபன்.
536. பாவக்ஞ: அபிப்ராயம் அறிந்தவன்.
537. பவரோகக்ன: ஸம்ஸாரம் என்ற ரோகத்தை அகற்றுபவன்.
539, சிதக்னிதேஹ: -- ஞானாக்னி சரீரன்‌.
540, சித்ரூப: - ஞான ரூபன்‌.
541, சிதானந்த: -- ஞானானந்தன்‌.
542, சிதாக்ருதி; -- ஞான வடிவானவன்‌.
513. நாட்யப்ரிய: - நடனத்தில்‌ விருப்பம்‌ உள்ளவன்‌.
544, நரபதி: - மனிதர்களுக்குப்‌ பதியாக இருப்பபவன்‌.
545. நர நாராயஹணார்ச்சிதத; -- நர நாராயணர்களால்‌ (கிருஷ்ணன்‌, அர்ஜுனன்‌ இவர்களால்‌) பூஜிக்கப்‌பட்டவன்‌.
546. நிஷாதராஜ; - வேடர்களுக்கு அரசன்‌.
517. நீஹார: - மூடுபனி உருவமானவன்‌.
518. நேஷ்டா - நேஷ்டா எனும்‌ பெயர்‌ உடைய வேள்விக்கான ரூபன்‌.
549. நிஷ்டுரபாஷண: -- (எதிரிகளிடம்‌) கொடுமையான சொற்கள்‌ உடையவன்‌.
559. நிம்னப்ரிய: -- பள்ளமான இடங்களில்‌ பிரியம்‌ உள்ளவன்‌.
551. நீலநேத்ர: -- கறுமை நிற கண்களை உடையவன்‌, நீலன்‌ எனும்‌ பூத கணத்தை எல்லாக்‌ காரியங்களிலும்‌ ஏவுபவன்‌.
852. நீலாங்க: -- கறுமை நிற அங்கங்களை உடையவன்‌.

No comments: