Pages

Wednesday, April 15, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 18





ௐ விப்ரபூஜ்யாய நம: ।அந்தணர்களை பூசிப்பவனே
ௐ வேலாராஶயே நம: ।அலைஅலையாக உள்ள கேசம் கொண்டவனே
ௐ சலாளகாய நம: ।அலைஅலையாக உள்ள கேசம் கொண்டவனே
ௐ கோலாஹலாய நம: ।பெரும் கூச்சல் உள்ளவனே
ௐ க்ரோட³நேத்ராய நம: ।பன்றி போன்ற கண்கள் உள்ளவனே
ௐ க்ரோடா³ஸ்யாய நம: । 430பன்றி முகனே
ௐ கபாலப்⁴ருதே நம: ।கபாலம் கொண்டவனே
ௐ குண்ஜரேட்³யாய நம: ।பெண்யானையால் வணங்கப்படுபவனே 
ௐ மஞ்ஜுவாஸஸே நம: ।அழகான ஆடை தரித்தவனே
ௐ க்ரியமாநாய நம: ।
செய்ய வேண்டிய கர்மங்கள் அனைத்தும் செய்பவனே
ௐ க்ரியாப்ரதா³ய நம: ।செய்ய வேண்டியவற்றை அருள்பவனே
ௐ க்ரீடா³நாதா⁴ய நம: ।விளையாட்டுகளுக்கு தலைவனே
ௐ கீலஹஸ்தாய நம: ।(கூரான) நகங்கள் கொண்ட கையனே
ௐ க்ரோஶமாநாய நம: ।ஒரு க்ரோச அளவினனே
ௐ ப³லாதி⁴காய நம: ।பெரும் பலமுள்ளவனே
ௐ கநகாய நம: । 440தங்கமே
ௐ ஹோத்ருபா⁴கி³நே நம: ।
யாகங்களில் ஹோத்ரு பாகத்துக்கு உரிமையுள்லவனே
ௐ க²வாஸாய நம: ।குகையில் வசிப்பவனே
ௐ க²சராய நம: ।குகையில் செல்பவனே
ௐ க²கா³ய நம: ।வாயு / பறவை/ சூரியன் போன்றவனே
ௐ க³ணகாய நம: ।கணக்கிடுபவனே/ சோதிடனே
ௐ கு³ணநிர்து³ஷ்டாய நம: ।குணத்தின் குற்றமற்றவனே
ௐ கு³ணத்யாகி³நே நம: ।குணங்களை தியாகம் செய்தவனே
ௐ குஶாதி⁴பாய நம: ।மகிழ்ச்சிக்கு உரிமையுள்ளவனே
ௐ பாடலாய நம: ।இளம் சிவப்பு மலர் போன்றவனே

   சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
426. விப்ர பூஜ்ய:அந்தணர்களால் பூஜிக்கத் தகுந்தவன்.
427. வேலாராசி : கடற்கரையில் அலைகளைப் போல் அசைகின்ற கேசங்கள் தரித்தவன்.
428. சலாலக: கடற்கரையில் அலைகளைப் போல் அசைகின்ற கேசங்கள் தரித்தவன். 429. க்ரோடாஸ்ய : பன்றி முகன், பொந்து போன்ற முகன், அல்லது இந்த விதமான சேனைகளை உடையவன்.
430. க்ரோடநேத்ர : பன்றிக் கண்ணன் , அல்லது பன்றியை உசுப்புவன். அர்ஜுனனுக்கு வரமளிக்க வேட உருக் கொண்ட பரமசிவனோடு காட்டில் பன்றியை உசுப்பினவன். (இக்கதை சிதம்பரத்தில் நடந்ததாகப் புராணம் கூறும். அதனால் பன்றியை உசுப்பின இடம் உசுப்பூர் என்று வழங்குகிறது)
431. கோலாஹல :அதிகம் கூச்சல் உள்ளவன்.
432. கபாலப்ருத்: கபாலம் தரித்தவன்.
433. கஞ்சாட: தாமரையில் விளையாடுபவன். கஞ்சாடம் என்ற யக்ஷிகளால் சூழப்பட்டவன்.
434. மஞ்சுவாஸா :அழகான ஆடை தரித்தவன்.
435. க்ரிய மாண: எல்லாக் கார்யங்களையும் செய்து கொண்டிருப்பவன்.
436. க்ரியாப்ரத: செய்கை அருளுபவன்.
437. க்ரீடாநாத: விளையாட்டிற்கு நாதன்.
438. கலஹஸ்த: சூலம் தரித்தவன்.
439. க்ரோசமான: இரண்டு மைல் அளவு கொண்டவன்.
440. குலாந்தக: தீயவர்களின் குலத்திற்கு அந்தகன்.
441. கனக : தோண்டுகிறவன்.
442. ஹோத்ருபாக: ஹோமம் செய்கிறவர்களிடம் பங்கு கொண்டவன்.
443, கவாஸ: - ஆகாயத்தில்‌ இருப்பவன்‌,
444, கசர;: -- ஆகாயத்தில்‌ சஞ்சரிப்பவன்‌,
445. க௧க:. -- பக்ஷி உருவன்‌.
446. கணக: -- களிப்பவன்‌,
447. குண நிர்துஷ்ட: -- குணங்களால்‌ தோஷமற்றவன்‌.
448. குணத்யாக: -- குணங்களைத்‌ தியாகம்‌ செய்பவன்‌.
449. குசாதிப: -- குசத்தீவுக்கு அதிபன்‌,
450. பாடல: -- (வெண்சிவப்பு நிறம்கொண்ட)பாதிரி புஷ்பம்‌ போன்றவன்‌.

No comments: