Pages

Wednesday, April 22, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 24



 
ௐ மேருவர்ணாய நம: ।மேரு நிறத்தவன் (பொன்நிறத்தவன்)
ௐ மஹோத³ராய நம: ।பெரும் வயிறனே!
ௐ மார்த்தாண்ட³பை⁴ரவாராத்⁴யாய நம: ।மார்த்தாண்ட பைரவனால் தியானிக்கப்படுபவனே
ௐ மணிரூபாய நம: ।மணி உருவத்தினனே
ௐ மருத்³வஹாய நம: । 580காற்றை தாங்குபவனே
ௐ மாஷப்ரியாய நம: ।உளுந்தை விரும்புவனே
ௐ மது⁴பாநாய நம: ।மது அருந்துகிறவனே
ௐ ம்ருʼணாலாய நம: ।தாமரை தண்டு போன்றவனே
ௐ மோஹிநீபதயே நம: ।மோகினியின் தலைவனே
ௐ மஹாகாமேஶதநயாய நம: ।மஹா காமேசனின் மகனே
ௐ மாத⁴வாய நம: ।வசந்தனே, மது குலத்தவனே
ௐ மத³க³ர்விதாய நம: ।மது அருந்தி திமிருடன் இருப்பவனே
ௐ மூலாதா⁴ராம்பு³ஜாவாஸாய நம: ।மூலாதாரத்தில் தாமரை மீது அமர்ந்தவனே
ௐ மூலவித்³யாஸ்வரூபகாய நம: ।மூல வித்யை உருவினனே
ௐ ஸ்வாதி⁴ஷ்டா²நமயாய நம: । 590சுவாதிஷ்ட மயனே
ௐ ஸ்வஸ்தா²ய நம: ।ஓய்வில் இருப்பவனே
ௐ ஸ்வஸ்திவாக்யாய நம: ।மங்கல சொற்களை உடையவனே
ௐ ஸ்ருவாயுதா⁴ய நம: ।
ஸ்ருவம் எனும் ஹோமக்கரண்டியை ஆயுதமாக தாங்கியவனே
ௐ மணிபூராப்³ஜநிலயாய நம: ।மணிபூரத்தில் தாமரை மீது அமர்ந்தவனே
ௐ மஹாபை⁴ரவபூஜிதாய நம: ।மாஹா பைரவனால் பூஜிக்கப்பட்டவனே
ௐ அநாஹதாப்³ஜரஸிகாய நம: ।அநாஹத தாமரையை ரசிப்பவனே
ௐ ஹ்ரீங்காரரஸபேஶலாய நம: ।ஹ்ரீம் எனும் ஒலியால் மனோகரமானவனே
ௐ பூ⁴மத்⁴யவாஸாய நம: ।பூமியின் மத்தியில் வசிப்பவனே
ௐ பூ⁴காந்தாய நம: ।பூமிக்கு பிரியமானவனே
ௐ ப⁴ரத்³வாஜப்ரபூஜிதாய நம: । 600பரத்வாஜரால் கௌரவிக்கப்பட்டவனே




  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
578. மேருவர்ண: மேருமலையைக் கொண்டாடுபவன்.
579. மஹோதர: பெருத்த வயிறு உடையவன்.
580. மார்த்தாண்ட பைரவாராத்ய : மார்த்தாண்ட பைரவனால் பூஜிக்கத் தகுந்தவன்.
581. மணிரூப: ரத்ன மணி போன்ற உருவன்.
582. மருத்வஹ: காற்றை வகிக்கிறவன்.
583. மாஷப்ரிய : உளுந்து தானியத்தில் பிரியம் உள்ளவன். மாஷன் என்ற வீரனிடம் பிரியம் உடையவன்.
584. மதுபான தேன் அருந்துபவன்.
585. ம்ருணாள:தாமரையைக் கொண்டவன்.
586. மோஹினீபதி : மோகினி என்பவருக்கு பதி
587. மஹா காமேச நயன: மஹா காமேசனுக்கு நேத்ரம் போல் பிரியமானவன்.
588. மாதவ: திருமால்.
589. மதகர்வித: மதத்தால் கர்வம் உள்ளவன்.
590. மூலாதாராம் புஜாவாஸ: மூலாதார கமலத்தில் வீற்றிருப்பவன்.
591. மூலவித்யா ஸ்வரூபக : மூல மந்த்ர உருவன்.
592. ஸ்வாதிஷ்டானமய: ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் விளங்குபவன்.
593. ஸ்வஸ்த : வேலையின்றி சுகமாக இருப்பவன்.
594. ஸ்வஸ்திவாக்ய: மங்களகரமான சொற்களை உடையவன்
595. ஸ்ருவாயுத : ஸ்ருவம் என்பது வேள்வியில் ஹோமம் செய்யக் கூடிய சிறியகரண்டி போன்ற பாத்திரம். இந்த ஸ்ருவத்தை ஆயுதமாக கொண்டவன்.
596. மணி பூராப்ஜ நிலய : மணிபூரகத்தில் அதாவது நாபிச்சக்கரத்தில் இருப்பவன்.
597. மஹா பைரவ பூஜித: மஹா பைரவனால் பூஜிக்கப்பட்டவன்.
598. அனாஹதாப்ஜ ரஸிக: இதய கமலத்தில் விளங்குபவன்.
599. ஹ்ரீங்கார ரஸபேஸல : ஹ்ரீங்கார உச்சரிப்பினால் மனோஹர மானவன்.
600. ப்ரூமத்ய வாஸ: புருவங்களின் நடுவில் வசிப்பவன்.
601. ப்ரூகாந்த: அழகான புருவங்கள் உடையவன். ப்ரூகன் என்பவனை சமீபத்தில் கொண்டவன்.
602. பரத்வாஜேன பூஜித: பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்டவன்.

 

No comments: