Pages

Thursday, April 16, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 6






சலூனுக்கு போய் முடி திருத்திகொண்டு திரும்பிவந்தார் கணேசன். நேராக வாசல் பக்கமாக இருந்த கிணற்றடிக்குப் போனார். அங்கே பக்கத்தில் இருந்த கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துண்டு ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு தான் போட்டுக்கொண்டிருந்த டீ சர்ட் வேட்டி ஆகியவற்றை தனியாக ஓரிடத்தில் போட்டார் அவரது மனைவி சித்ரா வந்து கிணற்றிலிருந்து முன்னேயே செய்து வைத்திருந்த தண்ணீரை பக்கெட்டில் இருந்து எடுத்து கணேசன் மீது ஊற்றினார். உடல் முழுவதும் தலையும் சேர்த்து நனைந்த பிறகு 'பார்த்துக்கோங்க' என்று சொல்லிவிட்டு அப்பால் சென்றார் கணேசன் பக்கெட்டில் இருந்து தானே தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டு குளிக்கலானார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த பேரன் நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தாத்தாவிடம் கேட்டான் "தாத்தா தாத்தா என் சலூன் போயிட்டு வந்து குளிக்கிறார்?"
தாத்தா சொன்னார் "சலூன் போனால் தீட்டுடா"
தலை முடிலதான் நிறைய பாக்டீரியா வைரஸ் எல்லாம் தங்கி இருக்கும்டா என்று சொல்லியவாறே உள்ளே போனார் சித்ரா.
தாத்தா அன்னிக்கு விட்டத மீதி சொல்லு வேற என்ன தீட்டு ஏன் அதைக் கடைப்பிடிக்கணும்?
தாத்தா சொன்னார் டேய் நாமெல்லாம் பூஜை செய்யறோம்; ஹோமங்கள் செய்யறோம்; ஜபம் எல்லாம் செய்கிறோம். அந்த மாதிரி செய்யும்போது எவ்வளவு எவ்வளவு சுத்தமாக இருக்குமோ அந்த அளவுக்கு பலன் அதிகமா இருக்கும். அதனால நாம இதெல்லாம் ரொம்ப பாக்கறோம்."
பேரன் கேட்டான்: "சரி தாத்தா மத்தவங்கள மேல பட்டாலும் தொட்டாலும் அது எப்படி தீட்டு ஆறது?"
தாத்தா சொன்னார் "இந்த கொரோனா வந்த பிறகு ஏன் எல்லாரும் இதுல ஜாக்கிரதையா இருக்கா ? எல்லாம் தள்ளி நிக்கிறா? ஏன்னா மத்தவங்க எங்கே போனாங்க எதை தொட்டாங்க அப்படிங்கிறது எல்லாம் தெரியாது. அதனால அதே மாதிரி நாமும் தள்ளி நிற்கறோம். மத்தவங்களை தொட மாட்டோம். அது விழுப்பு மடி இல்லைன்னு ஆயிடும்."
ஏன் தாத்தா ஸ்கூல்ல சிலபேர் பேசுறதெல்லாம்... அவங்கள்லாம் தீண்டத்தகாதவர்கள் அதனாலதான் தொடரதில்லை அப்படின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. நிஜமா தாத்தா?
இல்லடா. அப்படி இல்ல. சாதாரணமா தப்பு பண்ணவாளுக்குத்தான தண்டனை? இல்ல தப்பு செஞ்சதுக்காக வேற எதோ செய்யணும்? இதோ பார் இப்போ என் மேல வேற ஒத்தரோ, இல்ல அவர் மேல நானோ பட்டுட்டேன்னு வச்சுப்போம். நான் பூஜை பண்ண போகணும். அப்படினா யார் குளிக்கணும் அவரா நானா?
பூஜை பண்ணறத்துக்கு நீங்கதான் குளிக்கணும் தாத்தா.
அவ்வளவுதான்டா. என்ன காரியம் யார் செய்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சுத்தமா இருக்கணும். அவ்வளவுதான் விஷயம். இப்ப ஆஸ்பத்திரி இருக்கு. அங்க ஆப்பரேஷன் எல்லாம் செய்வா. ஆபரேஷன் தியேட்டர் உள்ள எல்லாரையும் உள்ளே விடுவாளா? மாட்டா. அதே மாதிரி ஆபரேஷன் செய்யறவரும் கையெல்லாம் சுத்தமா அயோடின் போட்டு அலம்பி கையெல்லாம் சுத்தமான துணியால் துடைத்துவிட்டு சுத்தமான கவுண் போட்டு கிளவுஸ் போட்டு ஆபரேஷன் செய்வார். இவரோ இல்ல தியேட்டர்குள்ள வர மத்தவங்களும் எப்படியும் அதுக்கான தனி டிரஸ் போட்டுண்டு தொப்பி போட்டுண்டு முகமூடி போட்டுண்டு தான் வருவாங்க. அதனால யார் பேஷன்ட், அவர் என்ன ஜாதி? யாரு ஆபரேஷன் பண்றாங்க அப்படிங்கறது விஷயமில்லை. என்ன வேலை அதுக்கு என்ன சுத்தம் இருக்கணும் அப்படிங்கிறது தான் விஷயம்.
சரிதான் தாத்தா! நீங்கள் சொல்லறது சரியாகத்தான் இருக்கு போலிருக்கு என்றான் பேரன்.

No comments: