Pages

Saturday, April 4, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -9




ௐ வேணுநாதா³ய நம: ।    புல்லாங்குழல் இசைப்பவனே
ௐ வரக்³ரீவாய நம: ।    அழகுக்கழுத்தனே
ௐ வராப⁴யகராந்விதாய நம: ।    வர அபய முத்திரைகாட்டும் கரங்களை உடையவனே
ௐ வர்சஸ்விநே நம: ।    ஒளிர்பவனே
ௐ விபுலக்³ரீவாய நம: ।    அகன்ற கழுத்தனே
ௐ விபுலாக்ஷாய நம: ।    அகன்ற கண்களை உடையவனே
ௐ விநோத³வாநே நம: ।    நகையூட்டுபவனே
ௐ வைணவாரண்யவாஸாய நம: ।    மூங்கில் காட்டில் வசிப்பவனே
ௐ வாமதே³வேநஸேவிதாய நம: ।    வாமதேவர் வணங்குபவனே
ௐ வேத்ரஹஸ்தாய நம: । 210    பிரம்பை கையில் வைத்துள்ளவனே
ௐ வேத³நித⁴யே நம: ।    வேத செல்வம் கொண்டவனே
ௐ வம்ஶதே³வாய நம: ।    வம்சத்துக்கே தேவன் போன்றவனே
ௐ வராங்கா³ய நம: ।    அழகிய அங்கங்களை உடையவனே
ௐ ஹ்ரீங்காராய நம: ।    ஹ்ரீம் சப்தமிடுபவனே
ௐ ஹ்ரிம்மநாய நம: ।    ஹ்ரீம் சப்தத்தில் நினைவு உள்ளவனே
ௐ ஹ்ரிஷ்டாயா நம: ।    குதூகலமானவனே
ௐ ஹிரண்யாய நம: ।    தங்கமயமானவனே
ௐ ஹேமஸம்ப⁴வாய நம: ।    தங்கத்திற்கு மூலமே
ௐ ஹுதாஶாய நம: ।    நெருப்பானவனே
ௐ ஹுதநிஷ்பந்நாய நம: । 220    நெருப்பில் பிறந்தவனே
ௐ ஹுங்காராக்ருʼதிஸுப்ரப⁴வே நம: ।ஹூங்காரம் செய்யும் பிரபுவே
ௐ ஹவ்யவாஹாய நம: ।    அவியை தேவர்களுக்கு கொண்டுபோய் அளிப்பவனே/ நெருப்பே
ௐ ஹவ்யகராய நம: ।    அவி அளிப்பவனே
ௐ அட்டஹாஸாய நம: ।    அட்டகாசமாக சிரிப்பவனே
ௐ அபராஹதாய நம: ।    விரட்ட முடியாதவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

201. வேணுநாத: குழல் ஊதுபவன் புல்லாங்குழலின் இனிய நாதம் உள்ளவன்
202. வரக்ரீவ: அழகான கழுத்து உடையவன்.
203. வராபயகரான் வித: வரம் அபயம் ஆகிய முத்திரைகளைத் தரித்த கரங்களுடன் கூடியவன்.
204. வர்சஸ்வீ தேஜஸ் உள்ளவன்.
205. விபுலக்ரீவ நீண்ட கழுத்து உடையவன்.
206. விபுலாக்ஷ:நீண்ட கண்களை உடையவன்.
207. வினோதவான்: இன்பன்
208. வைணவ வன வாஸ:மூங்கில் காட்டில் வசிப்பவன்.
209. வாமதேவேன ஸேவித: வாமதேவர் என்னும் முனிவரால் போற்றப்பட்டவன். 210. வேத்ரஹஸ்த: சாட்டையைக் கையில் தரித்தவன்.
211. வேஷநிதி :பல வேஷங்களுக்கு இருப்பிடமானவன் தனது மாயையினால் பல உருவங்கள் கொள்பவன்.
212. வம்சதேவ :சூரனுக்குப் பயந்து மூங்கில் உருவம் கொண்ட தேவேந்திரனால் போற்றப்பட்டவன். அல்லது வம்ச பரம்பரையாக அவரவர்களால் குலதெய்வமாக போற்றப்படுகிறவன்.
213. வராங்கக : ச்ரேஷ்டமான அங்கங்களை அல்லது பரிவார ஸேனைகளைக் கொண்டவன்.
214. ஹ்ரீம்கார :ஹ்ரீம் என்ற அக்ஷரத்தை முதலாகக் கொண்ட மந்திரத்தை உடையவன். 215. ஹ்ரீம்மனா: மேற்படி ஹ்ரீம்காரத்தில் நினைவு உள்ளவன்.
216. ஹ்ருஷ்ட: ஸந்துஷ்டன்.
217. ஹிரண்ய : பொன்மயமான உருவம் உள்ளவன்.
218. ஹேமஸம்பவ :தங்கத்தில் உதித்தவன். சிவ பெருமானின் வீர்யம் பொன் என்று கூறப்படுகிறது.
219. ஹுதாச :பக்தர்கள் மனமுவந்து கொடுக்கும் அன்னம், ஆஹுதி போன்ற ஹோமத்ரவ்யம் எதுவாயினும் மன நிறைவுடன் ஏற்றுக்கொள்பவன், தீவடிவன்.
220. ஹுதநிஷ்பன்ன: வேள்வியில் உண்டானவன். அல்லது வேள்வியை விக்னமின்றி பூர்த்தி செய்து தருபவன்.
221. ஹும்கார க்ருதி ஸுப்ரபு: ஹும் என்று கூச்சலிடுபவர்களுக்கு , வீரர்களுக்கு அரசன்.
222. ஹவ்யவாஹ: வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸை ஏற்பவன்.
223. ஹவ்யகர (அந்த) ஹவிஸைக் கையில் தரித்தவன்.
224. அட்டஹாஸ: அட்டகாசமாகப் பெருங் கூச்சல் இடுபவன்.
225. அபராஹத: வெல்ல முடியாதவன்.

 



No comments: