Pages

Thursday, April 2, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -7




ௐ மாநத⁴நாய நம: ।பெரும் மரியாதைக்கு உரியவனே
ௐ மோஹநாய நம: ।கவர்ச்சிகரமானவனே
ௐ மோக்ஷதா³யகாய நம: ।மோட்சத்தை அருள்பவனே
ௐ மித்ராய நம: ।நண்பனே
ௐ மேதா⁴ய நம: ।அறிவு மிகுந்தவனே
ௐ மஹௌஜஸ்விநே நம: ।மஹா வீர்யம் உள்ளவனே
ௐ மஹாவர்ஷப்ரதா³யகாய நம: ।பெரும் மழை அருள்பவனே
ௐ பா⁴ஷகாய நம: ।(பலரால்) பேசப்படுபவனே
ௐ பா⁴ஷ்ய ஶாஸ்த்ரஜ்ஞாய நம: ।(வேத) உரையையும் சாத்திரங்களையும் அறிந்தவனே
ௐ பா⁴நுமதே நம: । 160சூரியன் போன்றவனே
ௐ பா⁴நுதைஜஸே நம: ।சூரியனின் தேஜசை உடையவனே
ௐ பீ⁴ஷகே³ நம: ।பயங்கரமானவனே
ௐ ப⁴வாநீபுத்ராய நம: ।பவானியின் புத்திரனே
ௐ ப⁴வதாரண காரணாய நம: ।பிறப்பை (+இறப்பை) தாண்ட காரணமானவனே
ௐ நீலாம்ப³ராய நம: ।நீல உடை தரித்தவனே
ௐ நீலநிபா⁴ய நம: ।காலனை ஒத்தவனே
ௐ நீலக்³ரீவாய நம: ।நீல கழுத்தனே
ௐ நிரஞ்ஜநாய நம: ।குற்றமில்லாதவனே
ௐ நேத்ரத்ரயாய நம: ।முக்கண்ணனே
ௐ நிஷாத³ஜ்ஞாய நம: । 170வேடுவனால் அறியப்பட்டவனே
ௐ நாநாரத்நோபஶோபி⁴தாய நம: ।பல்வித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ ரத்நப்ரபா⁴ய நம: ।ரத்தினம் போல் ஒளிபவனே
ௐ ரமாபுத்ராய நம: ।லக்‌ஷ்மியின் புத்திரனே
ௐ ரமயா பரிதோஷிதாய நம: ।  லக்‌ஷ்மியால் மகிழ்விக்கப்பட்டவனே
ௐ ராஜஸேவ்வாய நம: ।அரசர்களால் சேவிக்கப்படுபவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:


151. மானதன: மானத்தைப் பொருளாகக் கொண்டவன்.
152. மோஹன : உலகத்தை மோஹிக்க செய்பவன்.
153. மோக்ஷதாயக :மோக்ஷத்தை அளிப்பவன்.
154. மித்ரம் : சினேகிதன் (சூர்யனது பெயர்களில் மித்ரன் என்பதும் ஒன்று)
155. மேதா : புத்தி வடிவமானவன்.
156. மஹௌஜஸ்வி: அதிக வீர்யம் உள்ளவன்.
157. மஹாவர்ஷப்ரதாயக: பெரிய மழையை உண்டு பண்ணுபவன்.
158. பாக்ஷக: பேசுகின்ற தெய்வம்.
159. பாஷ்ய சாஸ்த்ரக்ஞ: பாஷ்யம் முதலான சாஸ்த்ரங்களை அறிந்தவன்.
160. பானுமத் பானுதேஜஸ: சூரியன் போன்ற தேஜஸ் உடையவன்
162. பவான புத்ரக: பவானியின் புதல்வன் (பவானி என்பது ஜீவநாமமாகும்)
163. பிஷக்: வைத்தியன்.
164. பவதாரண காரண: ஸம்ஸார பந்தத்தை தாண்டுவதற்கு காரணமானவன்.
165. நீலாம்பர நீலவண்ண ஆடைதரித்தவன்.
166. நீலநிப:நீல வண்ண ஒளிபடைத்தவன்.
167. நீலக்ரீவ கருத்த கழுத்து உடையவன்.
168. நிரஞ்சன: பரமன், மஹோன்னதமானவன்.
169. நேத்ரத்ய:மூன்று கண்களை உடையவன்.
170. நிஷாதக்ஞ:(நிஷாதனால்) வேடனால் அறியப்பட்டவன்.
171. நானாரத்னோப சோபித : - அனேக ரத்தினங்களால் விளங்குபவன்.
172. ரத்னப்ரப: மாணிக்க ஒளி படைத்தவன்.
173. ரமாபுத்ர: லஷ்மி குமாரன்.
174. ரமயாபரிதோஷித: லஷ்மியால் சந்தோஷிக்கப் பட்டவன்.
175. ராஜஸேவ்ய: அரசர்களால் ஸேவிக்கத்தகுந்தவன்


No comments: