Pages

Tuesday, April 21, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 10





' அம்மா, காபி கொஞ்சம் ஆறிப்போயிடுத்து. சூடு பண்ணனும்னா சொல்லுங்கோ' என்று சொல்லியபடி காபி டம்ளர் டபராவுடன் வைத்துவிட்டுப் போனார் சித்ரா. அதை தொட்டுப் பார்த்துவிட்டு 'பரவால்லமா. குடிக்கற சூடு இருக்கு' என்றார் பாட்டி.
 எதிரே பார்த்தபடி இருந்த பேரன் கேட்டான் 'எதுக்கு டபரா பாட்டி? காப்பிதான் சூடா இல்லையே? அப்படியே குடிக்கலாம் இல்லியா?'
 ஆமாண்டா, குடிக்கிற சூடுல தான் இருக்கு. ஆனா பாட்டி அப்படியே மடக் மடக்கென்று குடிக்கிறது இல்ல. இல்லியா?'
மடக் மடக்ன்னு ஏன் குடிக்கணும் பாட்டி? கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.
 சரி பாட்டி எப்படி குடிக்கிறேன் பாரு.
பாட்டி முதலில் கொஞ்சம் காப்பியை டவரில் இருந்து டம்ளருக்கு ஊற்றிக்கொண்டார் பிறகு. பிறகு டம்ளரில் இருந்த காபியை தூக்கி வாயில் விட்டுக் கொண்டார். நிதானமாக அதை ருசித்து பிறகு விழுங்கினார். பிறகு இன்னும் கொஞ்சம் காப்பியை டபராவில் இருந்து டம்ளரில் ஊற்றிக் கொண்டார்.
பாட்டி புரிஞ்சுது டபரால இருந்து கொஞ்சம் கொஞ்சமா தம்ளரில் எடுத்துக்கொண்டு குடிக்கிற. ஆமா ஏன் இப்படி? இந்த காப்பிய டம்ளர்லேந்து அப்படியே குடிச்சா என்ன?
 தோ பாருடா நாம காப்பியை வாயில விடறப்போ அது அப்படியே ஒரு உருண்டை மாதிரி உள்ள போறது இல்லியே? ஒரு அருவி மாதிரி டம்பளர்லேந்து வாய்க்குள்ள விழறது. அப்போ வாய்க்கும் டம்பளர்ல இருக்கிற காபிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு இல்லையா? பாட்டி கொஞ்சமா எடுத்து விட்டுக்கிறப்ப அப்படி இருக்கா?
ம்ம்ம்ம்ம்? இல்லதான். ஆமாம் பாட்டி அதனால என்ன?
 அந்த மாதிரி சம்பந்தம் வந்துட்டதால அதை எச்சில் அப்படிம்பா. எச்சில் பண்ண ஒண்ணை திருப்பி சாப்படறது இல்லை.
பாட்டி, நா மாங்கா எல்லாம் வெடுக்கு வெடுக்கென்று கடிச்சு சாப்பிடுவேனே?
 நீ சின்ன பையன் இன்னும் அப்படி பண்ணிட்டு இருக்கே.  பாட்டி பழமெல்லாம் எப்படி சாப்பிடறேன் பாத்திருக்கியா?
 வாழைப்பழத்தை சின்னச் சின்னதாக விண்டு வாயில போட்டுப்ப.
 ஆமா. அப்படி சாப்படறதுதான் சரி. நீயும் பெரியவனான பிறகு அப்படி தான் சாப்பிடணும்.
 ஆமாம், அப்படின்னா சாதம் சாப்பிடறப்போ எப்படி சாப்படறது பாட்டி?
 சாப்பாடு சாப்படறப்போ கையிலிருந்து வாய்க்கு போயிடும். இந்த பல்லை தாண்டின எதுவும் திருப்பி வெளில தட்டுல விழுந்தா கூட அதை சாப்பிடக்கூடாது.
 ஓஹோ! ஆனா அன்னிக்கு டீவில பார்த்தேனே. ஒரு பெரிய தாம்பாளத்தில பிரியாணி வச்சு சுத்தி நாலு பேர் உக்காந்துண்டு அதிலிருந்து எடுத்து எடுத்து சாப்பிட்டா…
 டேய். இதுக்கு தான் டிவி பார்க்க கூடாது என்கிறது. அதெல்லாம் ஒரு சமுதாயத்தோடு சம்பிரதாயம். அதெல்லாம் நமக்கு ஒத்து வராது. அவா அந்த மாதிரி சாப்படறதாலத்தான் இப்ப பிரச்சனையா இருக்கு.  வெளியூர் போய்விட்டு வந்தவா, இன்பெக்ஷன் கொண்டு வந்தவா குடும்பத்தோடு இப்படி சாப்பிட்டா குடும்பம் முழுக்க சுலபமா வைரஸ் பரவாமல் என்ன செய்யும்?

No comments: