சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
653. டாகின : டாகினி என்ற சக்தியோடு விசுத்தி சக்கரத்தில் இருப்பவன்.
654. ஸூர்ய தேஜஸ்வி : சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.
655. ஸர்வ பூஷ: எல்லாம் அணிந்தவன்.
656. ஸத்குரு: ஸன்மார்க்கத்தைப் போதிக்கும் குருநாதன்.
657. ஸ்வதந்த்ர: பிற ஏவல் அற்றவன்.
658. ஸர்வதந்த்ரேச : எல்லாக் காரியங்களுக்கும் எஜமானன்.
659. தக்ஷிணாமூர்த்தி ரூபக : தக்ஷிணா மூர்த்தி உருவம் கொண்டவன்.
660. சித்ஸதானந்த கலிக: ஸச்சிதானந்த ரூபன்.
661. ப்ரேமரூப: இதரர்களால் விரும்பத் தக்க உருவமும் உள்ளமும் கொண்டவன். அன்பு வடிவானவன்.
662. ப்ரியங்கர: அடியவர்களுக்குப் பிரியத்தை அளிப்பவன்.
663. மித்யா ஜகத திஷ்டான: பொய்யான உலகைக் கொண்டவன்.
664. முக்தித: மோக்ஷம் அளிப்பவன்.
665. முக்தி ரூபக:மோக்ஷம் அடையும் வழியைக் காண்பிப்பவன்.
666. முமுக்ஷ: விடுதலையை விரும்பியவன். அதாவது மோக்ஷத்தைக் கருதியவன்.
667. கர்மபலத கர்மாக்களுக்குப் பலன் அளிப்பவன்.
668. மார்க்கதக்ஷ:வழி நடையில் ஸமக்தன்.
669. கார்மண: கர்மாக்களில் சம்பந்தித்தவன்.
670. மஹாபுத்த: பெரிய புத்தன். உருவன்.
671. மஹாசுத்த: ரொம்பவும் சுத்தமானவன்.
672. சுகவர்ண: கிளிபோல் நிறம் உள்ளவன்.
673. சுகப்ரிய: சுக முனிவரிடம் பிரியம் கொண்டவன்.
674. ஸோமப்ரிய: சந்திரனிடம் பிரியம் கொண்டவன்.
675. ஸுரப்ரீத: தேவர்களால் சந்தோஷிக்கப்பட்டவன்.
676. பர்வாராதன தத்பர: பருவ கால பூஜையில் ஆசை கொண்டவன்.
677. அஜப: அஜபா மந்திர ரூபன்.
No comments:
Post a Comment