ௐ அணுரூபாய நம: । அணு வடிவானவனே
ௐ ரூபகராய நம: । (அழகிய) உருவத்தை கொடுப்பவனே
ௐ அசராய நம: । கற்பூர மரமே?
ௐ அதநுரூபகாய நம: । உடல் வடிவம் இல்லாதவனே
ௐ ஹம்ஸமந்த்ராய நம: । 230 ஜபமில்லா ஜப மந்திரமே
ௐ ஹுதபு⁴கே³ நம: । ஆஹுதிகளை புசிப்பவன்.
ௐ ஹேமாம்ப³ராய நம: । தங்க ஆடை கொண்டவனே
ௐ ஸுலக்ஷணாய நம: । நல்ல இலட்சணமானவனே
ௐ நீபப்ரியாய நம: । கடம்ப பிரியனே
ௐ நீலவாஸஸே நம: । நீல உடை தரித்தவனே
ௐ நிதி⁴பாலாய நம: । செல்வத்தை காப்பவனே
ௐ நிராதபாய நம: । இருள் வடிவானவனே
ௐ க்ரோட³ஹஸ்தாய நம:। பன்றி போன்ற கை உடையவனே
ௐ தபஸ்த்ராத்ரே நம: । தவத்தை காப்பவனே
ௐ தபோரக்ஷாய நம:। 240 தவத்தை காப்பவனே
ௐ தபாஹ்வயாய நம: । தவத்தை அழைப்பவனே
ௐ மூர்தா⁴பி⁴ஷிக்தாய நம:।தலையில் அபிஷேகம் செய்யப்படுபவனே
ௐ மாநிநே நம: । பிரம்மச்சாரியே
ௐ மந்த்ரரூபாய நம: மந்திர வடிவினனே
ௐ ம்ருடா³ய நம: । அன்புடன் நடத்துபவனே
ௐ மநவே நம: । மன வடிவினனே
ௐ மேதா⁴வியே நம: । மேதாவியே
ௐ மேத⁴ஸாய நம: । நேர்த்திக்கடன்களை பெறுபவனே
ௐ முஷ்ணவே நம: । (துஷ்டர்களின் பொருட்களை அபகரிக்கும்) திருடனே!
ௐ மகராய நம: । 250 மகரம் என்னும் செல்வமே
சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
226. அணுரூப: அணு என்பது ஒரு அளவு பதார்த்தம், அதன் உருவன் அநேக அணுக்களின் சேர்க்கையால்தான் இவ்வுலகு நிறைந்துள்ளது.
227 ரூபகர : உருவத்தை உண்டாக்குபவன்.
228. அஜர: கிழத்தன்மை அற்றவன்.
229. அதனுரூபக : பெரிய உருவம் உள்ளவன், சரீரம் இல்லாதவன். அதாவது ஆகாசரூபன்.
230. ஹம்ஸ மந்த்ர : ஹம்ஸ என்னும் சொல்லை மந்திரமாகக் கொண்டவன்.
231. ஹுதபுக்: அக்னியில் அளிக்கப்படும் ஹவிஸை புசிப்பவன்.
232. ஹேமாம்பர ஸுலக்ஷண: பொன்னாடையினால் அழகு வாய்ந்தவன்.
233. ஹேமாம்பர ஸுலக்ஷண : பொன்னாடையினால் அழகு வாய்ந்தவன்.
234. நீபப்ரிய: கடம்ப விருக்ஷ புஷ்பங்களில் பிரியம் உள்ளவன்.
235. நீல வாஸா : நீல ஆடை தரித்தவன். அல்லது நீலன் என்ற வீரனோடு இருப்பவன். 236. நிதிபால: நிதியைக் காப்பவன்.
237. நிராதப: வெய்யில் இல்லாத இடம் கொண்டவன், அதாவது தோப்புகளில் கோயில் கொண்டவன்.
238. க்ரோட ஹஸ்த: மார்பில் கையை ஊன்றி இருப்பவன் (யோகசாஸ்தா ) பொந்துகளில் கையை விடுபவன். பன்றியை தரித்தவன்.
239. தபஸ்த்ராதா: முனிவர்களின் தவத்தை ரக்ஷிப்பவன்.
240. தபோரக்ஷ: தவத்தால் உலகத்தைக் காப்பாற்றுபவன்.
241. தபாஹ்வய : தவமென்ற பெயர் பூண்டவன், வஸந்த காலத்தில் கொண்டாடப்பட்டவன்.
242. மூர்தபிஷக்: வைத்ய ச்ரேஷ்டன்.
243. மானதன: மானத்தைப் பொருளாகக் கொண்டவன்.
244. மந்த்ரரூப: மந்திரங்களின் வடிவமானவன்.
245. ம்ருட: களிப்புடையவன்.
246. மனு : மனு உருக் கொண்டவன்.
247. மேதாவி : புத்திமான்.
248. மேதஸ: ஞானி, புத்தி உருவான்.
249. முஷ்ணு : துஷ்டர்களின் பொருளை அபகரிப்பவன்.
250. மகர : மகர ராசியின் உருவம் உள்ளவன். முதலை வடிவமான மண்டலத்தில் செல்லுபவன் அல்லது கடலில் மகர மீனைப் பிடிப்பவன்.
No comments:
Post a Comment