சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
276. க்ரௌஞ்ச
பேதக: க்ரௌஞ்சன்
என்னும் அரக்கனை, மலையை
அல்லது பக்ஷியை பேதித்தவன்.
277. கரியாகர:
சகல கரியைகளையும்
செய்கிறவன்.
278. க்ருபாளு:தயை உள்ளவன்.
279. கரவீரகரோருஹ: நரஸிம மூர்த்தியைப் போல் எதிரிகளை அழிக்கக் கூடிய நீண்ட கூரிய நகங்களுடன் கூடிய கரங்களை உடையவன். அரளி புஷ்பம் போன்ற விரல்களை உடையவன்.
280. கந்தர்பதர்ப ஹாரீ: காமனின் அகந்தையை அடக்கியவள்.
281. காமதாதா: இஷ்டங்களை அளிப்பவன்.
282. கபாலக: கபாலம் தரித்தவன்,
283. கைலாசவாஸ: கயிலை மலையில் வசிப்பவன்.
284. வரத: வரமளிப்பவன். விவாஹம் ஆகாத கன்னிகளுக்கு கணவனை அளிப்பவன், 285. விரோசன மிகவும் பிரகாசிக்கிறவன்.
286. விபாவஸுமுச்சுடர் உருவினன்.
287. பப்ருவாஹ: கீரி வாஹனன்.
288. பலாத்யக்ஷ பலன் என்பவனை சேனாபதியாக கொண்டவன்.
289. பணாமணி விபூஷண; ரத்னங்கள் உள்ள நாகங்களை அணிந்தவன்.
290. ஸுந்தர: அழகானவன்.
291. ஸுமுக : அழகான முகம் உள்ளவன்.
292. ஸ்வச்ச சுத்தமானவன்.
293. ஸபாஸத் சபையில் இருப்பவன்.
294. ஸபாகர சபையை உண்டு பண்ணுபவன்.
295. சரா நிவ்ருத்த: அவுணர்களின் பாணங்களால் அடிக்கப்படாதவன்.
296. சங்காப்த : ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்பட்ட சங்கையால் தரிக்கப்பட்ட சடைகளை உடையவன். சங்கா என்னும் ரிஷி பத்தினிக்குத் தோழன்.
297. சரணாகத பாலக: சரணமடைந்தவர்களைக் காப்பாற்றுபவன். "சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேவம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச” என்ற கீதை மொழிக்கேற்ப சரணாகதி ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு சரணமய்யப்பா என்று உருகும் அடியார்க்கு சகல ஸௌபாக்கியமும் தந்தருளும் சரணாகத ரக்ஷகன்.
298. தீக்ஷ்ணதம்ஷ்ட்ர: கூர்மையான பற்களை உடையவன்.
299. தீர்க்க ஜிஹ்வ: நீண்ட நாவினை உடையவன்.
300. பிங்கலாக்ஷ : பழுத்த கண்களை உடையவன்.
No comments:
Post a Comment