Pages

Monday, April 27, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 28





ௐ ஜநஹம்ஸாய நம: ।மனிதரில் அன்னம் போன்றவனே
ௐ ப²லபாணிப்ரபூஜிதாய நம: ।
கனியை கைக்கொண்டவனால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ அர்சிதாய நம: ।அர்ச்சனை செய்யப்பட்டவனே
ௐ வர்த⁴நாய நம: ।வளர்ப்பவனே
ௐ வாக்³மிநே நம: । 680பேச்சாளனே
ௐ வீரவேஷாய நம: ।வீர வேடம் பூண்டவனே
ௐ விது⁴ப்ரியாய நம: ।தனிமையை விரும்புபவனே
ௐ லாஸ்யப்ரியாய நம: ।நடனத்தை விரும்புபவனே
ௐ லயகராய நம: ।லயம் செய்பவனே
ௐ லாபா⁴லாப⁴விவர்ஜிதாய நம: ।லாபம் நஷ்டம் ஆகியவற்றை நீக்கியவனே
ௐ பஞ்சாநநாய நம: ।சிங்கம் போன்றவனே
ௐ பஞ்சகு³டா4ய நம: ।மறைந்திருக்கும் ஐந்து கொண்டவனே
ௐ பஞ்சயஜ்ஞப²லப்ரதா³ய நம: ।5 யக்ஞங்களின் பலனை அளிப்பவனே
ௐ பாஶஹஸ்தாய நம: ।பாசத்தை கைக்கொண்டவனே
ௐ பாவகேஶாய நம: । 690அக்னிக்கு தலைவனே
ௐ பர்ஜந்யஸமக³ர்ஜநாய நம: ।மேகம்போல கர்ஜிப்பவனே
ௐ பபாரயே நம: । ?பாபாரயேபாபத்துக்கு எதிரியே
ௐ பரமோதா³ராய நம: ।மிக்க உதார குணமுள்ளவனே
ௐ ப்ரஜேஶாய நம: ।ப்ரஜைகளுக்கு ஈசனே
ௐ பங்கநாஶநாய நம: ।சேற்றை அழிப்பவனே
ௐ நஷ்டகர்மணே நம: ।கர்மங்கள் நீங்கினவனே
ௐ நஷ்டவைராய நம: ।விரோதங்கள் நீங்கினவனே
ௐ இஷ்டஸித்³தி⁴ப்ரதா³யகாய நம: ।விரும்பியவற்றை சித்திக்க அருள்பவனே
ௐ நாகா³தீ⁴ஶாய நம: ।நாகங்களுக்கு தலைவனே
ௐ நஷ்டபாபாய நம: । 700பாபங்கள் நீங்கினவனே

 சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
678. ஜனஹம்ஸ: ஜனங்களுக்கு ஹம்ஸம் போன்றவன்.
679. ஹலபாணி ப்ரபூஜித : கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமரால் பூஜிக்கப்பட்டவன்.
680. அர்ச்சித: அர்ச்சிக்கப்பட்டவன்.
681. வர்ச்சஸ: காந்தன்.
682. வாக்மீ : பேச்சாளன்.
683. வீரவேஷ : வீர வேஷம் பூண்டவன். வீரன் என்ற தேவதையின் உருவன்.
684. விதுப்ரிய: சந்திரனிடம் பிரியம் உள்ளவன்.
685. லாஸ்யப்ரிய : ஸ்திரீகள் செய்யும் ஒரு வித கூத்திற்கு லாஸ்யம் என்று பெயர். அதில் விருப்பம் உள்ளவன்.
686. லயகர: மறைத்தலைச் செய்பவன்.
687. லாபலாப விவர்ஜித: லாப நஷ்டங்களைத் தள்ளினவன்.
688. பஞ்சானன : ஐந்து முகம் உள்ளவன். சிங்கத்தை வைத்துக் கொண்டவன். விரிந்த (மலர்ந்த) முக முள்ளவன்.
689. பஞ்சகுரு: பஞ்ச பாண்டவர்களுக்கு ஆசான். பராசரன் முதலிய ஐந்து மூர்த்திகளைக் குருவாக கொண்டவன்.
690. பஞ்ச யக்ஞ பலப்ரத : ஐந்து விதமான வேள்வியின் பலனை அளிப்பவன். அவைகளாவன - 1) அக்னி ஹோத்ரம், 2) தர்ச பூர்ண மாஸௌ, 3) சாதுர் மாஸ்யம், 4) பசு பந்தம், 5) ஸோமயாகம் (அல்லது) தேவ, பிரம்ம, பூத, பித்ரு , மனுஷ்ய யக்ஞங்கள் அல்லது அபிகமனம், உபாதானம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம், என்பவைகளாகும். விஸ்வஸ்ருஜா மயனம் என்ற ஒரு பெரிய வேள்வி - ஸத்ரயாகம் அனேக நாட்கள் பல தீக்ஷிதர்களால் நடத்தக் கூடியது. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து தத்துவங்களால் பூஜிப்பது என்ற மந்திர சாஸ்திரம் கூறும் பூஜையின் பலனை அளிப்பவன்.
691. பரசு ஹஸ்த : கோடாலியைக் கையில் கொண்டவன்.
692. பாவகேச: தீ இறைவன்.
693. பர்ஜன்ய ஸம கர்ஜித: இடி போல் கர்ஜிப்பவன்.
694. பாபாரி: பாபிகளுக்கு சத்துரு ஆனவன்.
695. பர மோதார: மிகவும் உதார குணம் உள்ளவன்.
696. ப்ரஜேச: பிரஜைகளுக்கு அரசன்.
697. பங்க நாசன: பாபத்தை அகற்றுபவன்.
698. நஷ்ட கர்மா: கர்மங்கள் அற்றவன்.
699. நஷ்ட வைர: வைர மற்றவன்.
700. இஷ்ட ஸித்தி ப்ரதாயக: வேண்டுபவற்றை அளிப்பவன்.
701. நாகாதீச: ஸர்ப்பங்களுக்கு ஈசன்.
702. நஷ்ட பாப: பாபம் அற்றவன்.

No comments: