Pages

Tuesday, April 7, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 11





ௐ மகராலயாய நம: ।குண்டலம் ஆடும் செவிகளை உடையவனே
ௐ மார்தாண்டா³ய நம: ।சூரியனே
ௐ மஞ்ஜுகேஶாய நம: ।அழகிய சிகை உடையவனே
ௐ மாஸபாலாய நம: ।மாதத்தை நிர்வகிப்பவனே
ௐ மஹௌஷத⁴யே நம: ।பெரும் மருந்தே
ௐ ஶ்ரோத்ரியாய நம: ।வேதங்களை கற்று பொருளை உணர்ந்தவனே
ௐ ஶோப⁴மாநாய நம: ।ஒளி பொருந்தியவனே
ௐ ஸவிதே நம: ।சவிதா என்னும் தேவதையே
ௐ ஸர்வதே³ஶிகாய நம: ।அனைவருக்கும் குருவே
ௐ சந்த்³ரஹாஸாய நம: । 260சந்திரனிடம் சந்தோஷம் உடையவன்
ௐ ஶமாய நம: ।மன அடக்கம் உடையவனே
ௐ ஶக்தாய நம: ।சக்தியுள்ளவனே
ௐ ஶஶிபா⁴ஸாய நம: ।சந்திரன் போல் ஒளி உள்ளவனே
ௐ ஶமாதி⁴காய நம: ।
ஏனைய தேவதைகளுக்கு சமமாகவே அதிகமாகவோ சக்தியுள்ளவன்
ௐ ஸுத³ந்தாய நம: ।அழகான பற்களை உடையவன்
ௐ ஸுகபோலாய நம: ।அழகிய கன்னங்கள் உடையவனே
ௐ ஷட்³வர்ணாய நம: ।ஆறு எழுத்து மந்திரம் உள்ளவனே
ௐ ஸம்பதோ³ঽதி⁴பாய நம: ।செல்வம் நிறைந்தவனே
ௐ க³ரளாய நம: ।விஷமுள்ளவனே
ௐ காலகண்டா²ய நம: । 270கறுத்த கழுத்தனே
ௐ கோ³நேதாயே நம: ।பசுக்களின் தலைவனே
ௐ கோ³முக²ப்ரப⁴வே நம: ।பசுக்கள் நிறைந்தவனே
ௐ கௌஶிகாய நம: ।விசுவாமித்திரரால பூஜிக்கப்பட்டவனே
ௐ காலதே³வாய நம: ।காலங்களின் தேவனே
ௐ க்ரோஶகாய நம: ।
ஒரு க்ரோசத்துக்கு (தூர அளவு) ஒரு கோவில்
 
 எனக் கொண்டவனே


சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
251. மகராலய : மீன்கள் வசிக்கும் கடல் உருவினன்.
252. மார்த்தாண்ட: சூரியன்.
253. மஞ்சுகேச: அழகான கேசம் உள்ளவன்.
254. மாஸபால: மாதம் தோறும் நடத்தப்படும் அவரவர்களுக்குரிய நல்ல காரியங்களை நடத்தி வைத்து ரக்ஷிப்பவன்.
255. மஹௌஷதி : பெரிய ஔஷதி ரூபன் (பவப்பிணி தீர்த்து வைக்கும் அருமருந்தானவன்).
256. ஸ்ரோத்ரிய : வேதங்கள் கற்றவன்.
257. சோபமான : விளங்குபவன்.
258. ஸவிதா: காலையில் உதிக்கும் சூரியன்.
259. ஸர்வதேசிக : எல்லா தேசங்களிலும் விளங்குபவன். எல்லோருக்கும் குருவானவன்.
260. சந்த்ர ஹாஸ: சந்திரனிடத்தில் சந்தோஷம் உள்ளவன். பூர்ண சந்திரன் போன்ற சிரிப்பு உள்ளவன், வாள் கொண்டவன்.
261. சம: பொறுமை மிக்கவன்.
262. சக்த: பலிஷ்டன்.
263. சசிபாஸ:சந்திரன் போன்ற மேனி உடையவன்.
264. ஸமாதிக : (மற்ற தெய்வங்களுக்கு) சமமாகவும், அதிகமாகவும் சக்தி வாய்ந்தவன்.
265. ஸுதந்த:அழகான பற்களை உடையவன்.
266. ஸுகபோல:அழகிய தாடை உள்ளவன்.
267. ஷட்வர்ண: ஆறு எழுத்தில் உள்ள விஞ்சை (மந்திரம்) கொண்டவன்.
268. ஸம்பதோதிப: செல்வத்தினால் அரசு உரிமை கொண்டவன்.
269. கரள:விஷரூபன்.
270. காலகண்ட: கறுத்த நெஞ்சு உடையவன்.
271. கோ நேதா: இந்திரிய ப்ரோகன், பசுக்களை ஓட்டுபவன்.
272. கோமுகப்ரபு: பசுக்கள், ஆடுகள் முதலிய பிராணிகளால் நிறைந்தவன். கோமுக வாத்ய ஒலியினால் பிரசித்தமானவன். சிதம்பர க்ஷேத்திரத்தில் தேவ ஸபையின் கோமுகத்வாரத்தில் சாஸ்தாவின் சன்னதி இருக்கிறது.
273. கௌசிக : விஸ்வாமித்ர முனிவரால் பூஜிக்கப்பட்டவன். ஆந்தையால் ஸுசிக்கப்பட்டவன். கௌசிக உருவன்.
274. காலதேவ நிமேஷாதி காலங்களுக்கு ஸ்வாமி,
275. க்ரோசக: இரண்டு நாழிகைப் பொழுதில் நடந்து செல்லும் வழிக்கு க்ரோசம் என்ற பெயர். அவ்விதம் உள்ள வழிகள் தோறும் ஆலயம் கொண்டவன். ஒலி நிறைந்தவன்.



No comments: