Pages

Thursday, April 16, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 19





ௐ பத்ரதா⁴ரிணே நம: । 450இலைகளை தரித்தவனே
ௐ பலாஶாய நம: ।பலாச மரங்களால் சூழப்பட்டவனே
ௐ புத்ரவர்த⁴நாய நம: ।புத்திரனை (பேறு) அளிப்பவனே
ௐ பித்ருʼஸச்சரிதாய நம: ।தந்தை போல் நன்நடத்தை உள்ளவனே
ௐ ப்ரேஷ்டாய நம: ।மிகவும் ப்ரியமானவனே
ௐ பாபப⁴ஸ்மபுநஶ்ஶுசயே நம: ।பாபங்களை சாம்பலாக்குபவனே
ௐ பா²லநேத்ராய நம: ।நெற்றிக்கண்ணனே
ௐ பு²ல்லகேஶாய நம: ।மலர்ந்த கேசமுடையவனே
ௐ பு²ல்லகல்ஹாரபூ⁴ஷிதாய நம: ।
மலர்ந்த செஞ்காந்தள் பூவால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ ப²ணிஸேவ்யாய நம: ।நாகப்பாம்புகளால் வணங்கப்பட்டவனே
ௐ பட்டப⁴த்³ராய நம: । 460கச்சை அணிந்து விளங்குபவனே
ௐ படவே நம: ।சாமர்த்யசாலியே
ௐ வாக்³மிநே நம: ।பேச்சு வன்மையுள்ளவனே
ௐ வயோதி⁴காய நம: ।அதிக வயதானவனே
ௐ சோரநாட்யாய நம: ।திருடன்போல நடிப்பவனே
ௐ சோரவேஷாய நம: ।திருடன் வேடம் அணிந்தவனே
ௐ சோரக்⁴நாய நம: ।திருடர்களை கொல்லுபவனே
ௐ ஶௌர்யவர்த⁴நாய நம: ।திறனுள்ளவனே
ௐ சஞ்சலாக்ஷாய நம: ।அலைகின்ற கண்களை உடையவனே
ௐ சாமரகாய நம: ।சாமரம் உடையவனே
ௐ மரீசயே நம: । 470சூரியனே
ௐ மத³கா³மிகாய நம: ।மது அருந்தியதுபோல செல்பவனே
ௐ ம்ருʼடா³பா⁴ய நம: ।சிவனை போல் இருப்பவனே
ௐ மேஷவாஹாய நம: ।ஆட்டை வாகனமாக கொண்டவனே

   சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
451. பத்ரதாரீ -- இலைகளைத்‌ தரித்தவன்‌.
452. பாலாச: -- பாலை, புரச மரங்களால்‌ சூழப்‌பட்டவன்‌.
453. புத்ர வர்தன;: -- ஸந்ததி விளங்க ஆண்‌ மகவை ௮௨.ப்பவன்‌,
454. பித்ரு ஸச்சரித: -- தந்தையைப்போல நல்ல நடத்தை உடையவன்‌ .
455. பேஷ்டு; -- பிசைகிறவன்‌,
456. பாப பஸ்மா -- பாபங்களைச்‌' சாம்பலாக்குகிறவன்‌,.
457, புனச்சுசி; -- அஜாமுகியிடம்‌ சிக்கிய இந்திராணியை மீட்டு சுத்தி செய்தவன்‌,
498. பால நேத்ர: -- நெற்றியில்‌ கண்‌ உடையவன்‌.
459, புல்ல கேச: -- மலர்ந்த கேசம்‌ உள்ளவன்‌,
460. புல்ல கல்ஹார பூஷிக: -- மலர்ந்த செங்கழுநீர்‌ புஷ்பம்‌ அணிந்தவன்‌,
461. பணிஸேவ்ய: -. நாகங்களால்‌ ஸேவிக்கப்‌ பட்டவன்‌.
462, பட்ட பத்ர; -- கச்சை - பட்டை கொண்டவன்‌.
463. படு; -- புத்திமான்‌ - சமர்த்தன்‌.
464. வாக்மீ -- சிறந்த பேச்சு (வாக்விலாஸம்‌) உள்ளவன்‌.
469. வயோதிக; -- வயதில்‌ பெரியவன்‌.
466. சோரநாட்ய: -- மறைவாக நடிப்பவன்‌.
467, சோரவேஷ: -- திருடன்‌ போல்‌ வேடம்‌ பூண்டவன்‌.
468, சோரக்ன: -- திருடர்களைக்‌ கொல்லுபவன்‌.
469, செளர்யவர்த்தன;: -- திருட்டை விளக்குபவன்‌.
470. சஞ்சலாக்ஷ; -- அசைகின்ற கண்களைக்‌ கொண்டவன்‌.
471, சாமரக: -- வெண்சாமரம்‌ பூண்டவன்‌.
472. மரீசி; -- சூரியனுக்கு 12 நாமங்கள்‌ உண்டு. அதில்‌ மரீசி என்பது ஒன்றாகும்‌. எனவே சூரியனைப்‌ போல ஒளியுடன்‌ விளங்குபவன்‌. மரீச முனிவரால்‌ துதிக்கப்பட்டவன்‌. மிளகு எனும்‌ தான்யத்தில்‌ பிரியம்‌ உள்ளவன்‌.
473. மந்தகாமிக: -- மெதுவாகச்‌ செல்பவன்‌.
473. மந்தகாமிக மெதுவாக செல்பவன்.
474. ம்ருடாப: -குளிர்ந்த காந்திமான். மிருடனைப் (சிவனை) போன்றவன். பொறுமை வாய்ந்தவன்.
475. மேஷவாஹ:ஆட்டு கடாவை வாகனமாகக் கொண்டவன். (கந்தன், இந்திரன்)

No comments: