Pages

Saturday, April 18, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 21





ௐ மநுப்ரியாய நம: ।வேதங்களை விரும்புபவனே
ௐ கு³ட³ருபாய நம: । 500வெல்ல வடிவினனே
ௐ கு³டா³கேஶாய நம: ।அடர்த்தியான கேசமுடையவனே
ௐ குலத⁴ர்மபராயணாய நம: ।குலதர்மத்தை நடத்தி வைப்பவனே
ௐ காலகண்டா²ய நம: ।கரும் கழுத்தனே
ௐ கா³ட⁴கா³த்ராய நம: ।கெட்டியான உடல் உள்ளவனே
ௐ கோ³த்ரரூபாய நம: ।கோத்திர ரிஷி ரூபனே
ௐ குலேஶ்வராய நம: ।குல ஈஸ்வரனே
ௐ ஆநந்த³பை⁴ரவாராத்⁴யாய நம: ।ஆனந்த பைரவரால் பூசிக்கப்பட்டவனே
ௐ ஹயமேத⁴ப²லப்ரதா³ய நம: ।
தன்னை பூசிப்பவர்களுக்கு அஸ்வமேத பலனை அளிப்பவனே
ௐ த³த்⁴யந்நாஸக்தஹ்ருʼத³யாய நம: ।தயிர் சோற்றில் பிரியமுள்ளவனே
ௐ கு³டா³ந்நப்ரீதமாநஸாய நம: । 510சர்க்கரை பொங்கலில் பிரியமுள்ளவனே
ௐ க்⁴ருʼதாந்நாஸக்தஹ்ருʼத³யாய நம: ।நெய் அன்னத்தில் இதயம் கொண்டவனே
ௐ கௌ³ராங்கா³ய நம: ।ஒளிரும்/ இளம்சிவப்பு அங்கங்களை உடையவனே
ௐ க³ர்வப⁴ஞ்ஜகாய நம: ।கர்வத்தை அகற்றுபவனே
ௐ க³ணேஶபூஜ்யாய நம: ।கணேசனால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ க³க³நாய நம: ।ஆகாயம் போன்றவனே
ௐ க³ணாநாம்பதயே நம: ।கணங்களுக்கு தலைவனே
ௐ ஊர்ஜிதாய நம: ।பலமும் சக்தியும் கொண்டவனே
ௐ ச²த்³மஹீநாய நம: ।போலித்தனத்தை நீக்குபவனே
ௐ ஶஶிரதா³ய நம: ।நிலவொளியில் திளைப்பவனே
ௐ ஶத்ரூணாம்பதயே நம: । 520எதிரிகளை கட்டுக்குள் கொண்டு வருபவனே
ௐ அங்கி³ரஸே நம: ।அக்னியின் வம்சத்தினனே
ௐ சராசரமயாய நம: ।அசையும் அசையா பொருட்கள் உருவானவனே
ௐ ஶாந்தாய நம: ।சாந்த குணத்தினனே
ௐ ஶரபே⁴ஶாய நம: ।சரபத்தின் தலைவனே
ௐ ஶதாதபாய நம: ।சதாதபர் முனி வடிவினனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
501. மனுப்ரிய: வேத மந்திரங்களில் பிரியம் உள்ளவன்.
502. குடரூப: வெல்லம் போன்ற உருவினன்.
503. குடாகேச : அர்ஜுனன். (அர்ஜுனனுக்கு குடாகேசன் என்ற பெயருண்டு)
504. குலதர்ம பராயண: அவரவர்களின் குலத்திற்கு உரிய தர்மங்களை நடத்தி வைப்பவன்.
505. காலகண்ட: கருத்த நிறமுள்ள கழுத்தை உடையவன்.
506. காடகாத்ர: கெட்டியான சரீரம் உள்ளவன்.
507. கோத்ரரூப: கோத்ர ரிஷி உருவினன். அல்லது ஒளிந்து கொண்ட கோத்ரன் என்ற அரக்கனை இந்திரனுக்கு காண்பித்தவன்.
508. குலேஸ்வர ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவன்.
509. ஆனந்த பைரவாராத்ய : ஆனந்த பைரவனால் பூஜிக்கப்பட்டவன்.
510. ஹய மேத பலப்ரத: தன்னை பூஜிப்பவர்களுக்கு அஸ்வமேதயாகத்தின் பலனை (அதாவது இந்திர பதவியை) அளிப்பவன்.
511. தத்யன்னா ஸக்தஹ்ருதய : தயிர் அன்னத்தில் விருப்பம் உள்ளவன்.
512. குடான்னப்ரீத மானஸ: சர்க்கரைப் பொங்கலில் பிரியமுள்ள மனம் உடையவன். 513. க்ருதான்னா ஸக்த ஹ்ருதய: நெய் கலந்த அன்னத்தில் பிரியம் உள்ள இதயம் கொண்டவன்.
514. கௌராங்க: பொன்மயமான அவயங்கள் உடையவன்.
515. கர்வ பஞ்சக:கர்வத்தை அகற்றுபவன்.
516. கணேச பூஜ்ய கணேசனால் பூஜிக்கத் தகுந்தவன்.
517. கக: ஆகாச ரூபன்.
518. கணானாம் பதி: சிவகணங்களுக்கு இந்திரியங்களுக்கு அதிபதி,
519. கர்ஜித கர்ஜிக்கிறவன்.
520. சத்மஹீன: கபடம் இல்லாதவன்.
521. சசிரத: சந்திரன் போல் வெண்மையான பற்களை உடையவன்.
522. சத்ரூணாம் பதி :சத்துருக்களையும் காப்பவன்.
523. அங்கிரா: அங்கிரஸ் என்னும் முனிவரின் உருவினன்.
524. சரசரமய: அசைகின்றதும் மசையாததுமான பொருள்களின் உருவினன்.
525. சாந்த சாந்த குணம் உள்ளவன்.
526. சரபேச எட்டுக்கால் பக்ஷி வடிவினன்.
527. சதாதப:சதாதபர் முனிவடிவினன்.
 

No comments: