Pages

Friday, April 3, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -8

ௐ ராஜத⁴நாய நம: ।அரசர்களுக்கு ஒப்பான செல்வம் உடையவனே
ௐ ரணதோ³ர்த³ண்ட³மண்டி³தாய நம: ।யுத்த களத்தில் கதையை ஏந்தியவனே
ௐ ரமணாய நம: ।மனதிற்கினியவனே
ௐ ரேணுகாஸேவ்யாய நம: ।எல்லையம்மனால் வணங்கப்பட்டவனே
ௐ ரஜநீசரதா³ரணாய நம: । 180?அவுரி/ திராட்சை/ மஞ்சள் மாலை அணிந்தவனே
ௐ ஈஶாநாய நம: ।வடகிழக்கு தலைவனே
ௐ இப⁴ராட்ஸேவ்யாய நம: ।சிங்கங்களால் வணங்கப்படுபவனே
ௐ ஈஷணாத்ரயநாஶநாய நம: ।மூவாசைகளை நாசம் செய்பவனே
ௐ இடா³வாஸாய நம: ।இடா தேவி உறைபவனே
ௐ ஹேமநிபா⁴ய நம: ।தங்கத்தை ஒத்தவனே
ௐ ஹைமப்ராகாரஶோபி⁴தாய நம: ।தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ ஹயப்ரியாய நம: ।குதிரையை விரும்புவனே
ௐ ஹயக்³ரீவாய நம: ।குதிரை கழுத்தனே
ௐ ஹம்ஸாய நம: ।ஹம்ச துறவியே
ௐ ஹரிஹராத்மஜாய நம: । 190அரிக்கும் அரனுக்கும் பிறந்தவனே
ௐ ஹாடஸ்ப²டிகப்ரக்²யாய நம: ।தங்கத்தில் பதித்த ஸ்படிகம் போல் ஒளிர்பவனே
ௐ ஹம்ஸாரூடே⁴நஸேவிதாய நம: ।அன்னத்தில் ஏறியவளால் வணங்கப்படுபவனே
ௐ வநவாஸாய நம: ।வனத்தில் வசிப்பவனே
ௐ வநாத்⁴யக்ஷாய நம: ।காட்டுக்கு தலைவனே
ௐ வாமதே³வாய நம: ।கவிஞனே
ௐ வாராநநாய நம: ।வெல்ல இயலாதாவனே
ௐ வைவஸ்வதபதயே நம: ।யமனது புத்திரர்களுக்கு அதிபதியே
ௐ விஷ்ணவே  நம: ।எங்கும் நிறைந்தவனே
ௐ விராட்³ ரூபாய நம: ।விராட் ரூபனே
ௐ விஶாம்பதியே நம: । 200 நச்சுக்களின் தலைவனே (கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.)

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
176. ராஜதன: அரசர்களின் ஐஸ்வர்யம் போன்றவன்.
177. ரணதோர் தண்ட மண்டித: யுத்தகாலத்தில் கரத்தில் கதையை ஏந்தியவன்.
178. ரமண: இன்பம் அளிப்பவன்.
179. ரேணுகா ஸேவ்ய : ஜமதக்னி முனிவரின் பத்னியும், பரசுராமரின் தாயுமான ரேணுகாவினால் ஸேவிக்கத் தகுந்தவன்.
180. ரஜனி சர தாரண: ராக்ஷஸர்களை சிக்ஷிப்பவன்.
181. ஈசான: ஈசான ரூபன்.
182. இபராட் ஸேவ்ய : யானை அரசரால் ஸேவிக்கத் தகுந்தவன். இதனால் சாஸ்தாவிற்கு யானை வாகனம் கொடுப்பது, கோயிலின் முன்புறம் அவ்வடிவம் அமைத்தல் நல்லது.
183. ஈஷணாத்ரய நாசன: மண், பொன், பொருள் இம்மூன்று ஆசைகளையும் அழிப்பவன்.
184. இடாவாஸ: இடா என்னும் நாடியில் வசிப்பவன். பூமி, வேள்வியில் உபயோகப்படும் ஒரு த்ரவ்யம், வலது மூக்கு இவைகளில் வசிப்பவன்
185. ஹைமப்ராகார ஸோபித: தங்கமயமான ப்ராகாரங்களால் விளங்குபவன். (காந்த மலையில் ஸ்வர்ணமய விதானத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா காக்ஷி தருகிறார்).
187. ஹரிஹராத்மஜ: விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் புதல்வன். சைவ வைஷ்ணவ சைதன்யன்.
188. ஹம்ஸ : அன்ன பக்ஷி வடிவானவன், சன்யாசி உருவன். பரமார்த்த ஸ்வ ரூபன்.
189. ஹயக்ரிவ: குதிரை முகம் கொண்டவன். ஹயக்ரீவ உருவினன்.
190. ஹயப்ரிய: குதிரையிடம் பற்று கொண்டவன்.
191. ஹாடக ஸ்படிக ப்ரக்ய: தங்கத்தில் பதித்த ஸ்படிகம் போன்றவன்.
192. ஹம்ஸா ரூடேன ஸேவித: அன்னவாகனம் கொண்ட பிரம்ம தேவனால் ஸேவிக்கப்பட்டவன்.
193. வனவாஸ: காட்டில் வசிப்பவன்.
194. வனாத்யக்ஷ: காடுகளுக்கு அரசன்.
195. வாமதேவ: வாமதேவ ரூபன், ஸ்திரீகளுக்கு தெய்வம். தனது இடது புறத்தில் தேவர்களை உடையவன்.
196. வரானன : ச்ரேஷ்டமான முகம் உள்ளவன்.
197. வைவஸ்வத பதி : சூரியனின் புதல்வர்களான யமனுக்கும், சனி பகவானுக்கும் பதியானவன், சாஸ்தாவை முக்கியமாக பூஜித்து உபாஸிப்பவர்களுக்கு யமபாதையோ, சனிபாதையோ உண்டாகாது.
198. விஷ்ணு : எங்கும் இருப்பவன்.
199. விராட் ரூப: பெரிய உருவம் உள்ளவன். உலகத்தின் உருவினன்.
200. விசாலவான்: விஸ்தார முள்ளவன், ப்ரஸித்தன்.

No comments: