சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
400. ஸுஷும்னா மத்யசம்பவ : ஸுஷும்னா என்ற நாடியின் நடுவில் உண்டானவன். 401. பிக்ஷாடன : பிக்ஷை எடுப்பவன்.
402. பீமவர்ச்ச: பயத்தைக் கொடுக்கும் ஒளி உடையவன்.
403. வரகீர்த்தி : அடியவர்களுக்கு வரம் அளிப்பதால் பெருமை வாய்ந்தவன். அதிக புகழ் பெற்றவன்.
404. ஸபேஸ்வர: சபைக்கு ஈஸ்வரன்.
405. வாசாத்த : வாக்குகளுக்கு அப்பாற்பட்டவன்.
406. வரநிதி : சங்கநிதி முதலிய ஸ்ரேஷ்டமான நிதிகளைக் கொண்டவன்.
407. பரிவேத்தா : தமையனாருக்கு முன் திருமணம் செய்து கொண்டவன்.
408. ப்ரமாணக: நிச்சயமானவன்.
409. அப்ரமேய: கருத முடியாதவன்.
410. அநிருத்த: தகைய முடியாதவன்.
411. அனந்தாதித்ய வர்சஸ:அனேக சூர்ய ஒளிபடைத்தவன்.
412. வேஷப்ரிய: வேஷத்தில் விருப்பம் உள்ளவன்.
413. விஷக்ராஹ: விஷ ஜந்துக்களை உடையவன். பாற்கடலில் உண்டான கால கூடம் என்ற விஷத்தைக் கையினால் எடுத்தவன். (நந்தி உருவன்)
414. வரதான கரோத்தம் : அடியவர்களுக்கு இஷ்டங்களை அளிப்பதில் பெருமை வாய்ந்தவன்.
415. விபின: காடுகளை உடையவன்.
416. வேதஸார: வேதங்களில் நுட்பமாகக் கூறப்பட்டவன்.
417. வேதாந்தை பரிதோஷித: -உபநிஷத்துக்களால் சந்தோஷிக்கப்பட்டவன்.
418. வக்ராகம் : வக்ரமான கணங்களின் வருகை உள்ளவன். வக்ரமான, அதாவது சுலபமல்லாத வழியால் அடையத் தகுந்தவன். ஆகையால் சாஸ்தாவின் ஆலயங்கள் சுலபமல்லாத வழிகளால் அடையக் கூடியதாக இருக்கிறது.
419. வக்ரவாக்: வக்கிரமான பேச்சுள்ளவன்.
420. பலதாதா: சரீர பலத்தை அளிப்பவன்.
421. விமானவான்: மஞ்சத்தில் விளங்குபவன்.
422. வஜ்ரகாந்த: வைரம் போல் விளங்குபவன்.
423. வம்சவர: உயர்ந்த வம்சத்தில் உதித்தவன். வேணு தண்டம் தாங்கினவன்.
424. வடுரக்ஷா விசாரத: குழந்தைகளைக் காப்பாற்றுவதில் ஸ்ரேஷ்டமானவன்.
425. வப்ரக்ரீட : நதிகளின் கரையில் விளையாடுபவன்.
குறிப்பு: தீக்ஷிதரின் சில மொழிபெயர்ப்புகள் இன்னும் சரியாக இருக்கலாம் என்று தோன்றியதாலும் - அவர் எடுத்துக்கொள்ளும் சொற்கள் பாட பேதமாக இருப்பதாலும் நான் கொஞ்சம் மூளையை கசக்கிக்கொண்டு செய்யும் மொழிபெயர்ப்புகள் தொடர்கின்றன. சில நமாவளிகளுக்கு ப்ராசீன வ்யாக்யானம் இருக்கின்றன. அதனால் விசித்ரமான/ தாந்த்ரீகமான வார்த்தைகளை நிர்ணயம் செய்துகொள்ள முடியும். அப்படி இல்லாத இது போன்ற நாமாவளிகள் ரொம்ப சிரமம். பல கை மாறி எழுதப்பட்டு தப்புகள் வந்திருக்கும். என்ன சொல்ல வருகிறார்கள் என்று வேற ஆதாரம் இல்லாம சரி செய்வது ஸாத்யமில்லாமல் போகலாம். ஆகவே அவை அப்படியே வெற்றாக விடப்படுகின்றன.
பொருத்தருள்க!
No comments:
Post a Comment