Pages

Wednesday, April 15, 2020

#கொரோனாவும்_கோமு_பாட்டியின்_ஆச்சாரமும்- 5





 
தாத்தா தீட்டுன்னா என்னனு பாட்டிகிட்ட கேட்டேன். உன்ன கேக்கச் சொல்லிட்டா.
எந்த தீட்டுடா?
ஏன் தாத்தா அதுல நிறைய இருக்கான்னா?
ஆமாடா.
சரி ஏதாவது சொல்லேன்.
சரி, சாவு தீட்டு.
ம்ம்ம்ம் ரெண்டு வருஷம் முன்ன உன் அண்ணா செத்துப்போனப்ப நீ பூஜ ஔபாசனம் எல்லாம் நிறுத்திட்டியே அப்படியா?
அட! பரவால்லயே? இன்னும் ஞாபகம் வெச்சுண்டு இருக்கியே? என்று சிலாகித்தார் தாத்தா.
வேற என்ன பண்ணுவீங்க தாத்தா?
பண்ணறத விட என்ன பண்ண மாட்டன்னு கேளு.
ம் சரி. என்ன பண்ண மாட்ட?
கோவிலுக்கு போ மாட்டோம். தானம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம். ஹோமம் செய்ய மாட்டோம். வேதம் சொல்லித்தர் மாட்டோம். சொல்லிக்கவும் மாட்டா. இன்னொருத்தர் வீட்டுக்கு போக மாட்டோம். வீடிலேந்து யாருக்கும் எதையும் கொடுக்கவும் மாட்டோம்.
எவ்ளோ நாளுக்கு தாத்தா?
அது செத்துப்போனவர் என்ன உறவு என்கறதப்பொருத்து 10 நாள் முடிய இருக்கும்டா.
ஓ அப்பறம்?

அப்பறம் பிரசவத்தீட்டு. இதுவும் சாவுத்தீட்டு மாதிரினாலும் அவ்வளவு கெடுபிடி இல்ல. தாத்தா குளிக்காம பூஜ பண்ண மாட்டேன்ல?
ஆமா ஏன்?
குளிக்காட்டா அசுத்தி. அந்த மாதிரிதான் அசுத்தி பிரசவ தீட்டுக்கும்.

அம்மா தீட்டுன்னு சொல்லி 3 நா ஒதுங்கிக்கறாளே? அது?
அது வேறடா. இந்த்ரன் விஸ்வரூபன்னு ஒரு வேதம் படிச்சவனை கொன்னுட்டான். அதனால ப்ரம்மஹத்தி தோஷம் வந்துடுத்து. ஆயிரம் வருஷம் ஒளிஞ்சிண்டு இருந்து அப்பறம் வெளிய வந்தான். அந்த தோஷத்தை நீக்கினாத்தானே அவனோட வேலைக்கு திரும்பலாம்? அதனால யார் இத வாங்கிப்பான்னு ஆள் தேடி திரிஞ்சான். பூமி, மரங்கள் இவா கிட்ட கொடுத்துட்ட மீதிய பெண்களுக்கு கொடுத்தான். இந்த தோஷத்தத்தான் அவா மாசம் 3 நாள் அனுபவிக்கறா. அதனால தீட்டு என்றார் தாத்தா.

கணேசனும் சித்ராவும் ஆச்சரியமாக அவரை பார்த்தனர்.
ஏண்டா அப்படி பாக்கறே? இது வேதத்தில சொல்லி இருக்கற குட்டிக்கதைடா என்றார் சாஸ்திரிகள். க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய சாகை 2 ஆம் காண்டம் 5 ஆம் பிரச்னத்தில இருக்கு. போய் பாரு!
( https://anmikam4dumbme.blogspot.com/2016/02/1_29.html , https://anmikam4dumbme.blogspot.com/2016/03/2.html )

சரி தாத்தா. வேறா?
வீட்ட விட்டு வெளியே போனாலே தீட்டு ஆக நிறைய சான்ஸ் இருக்குடா. பருத்தியூர்ல எங்க தாத்தா வீட்டில வெளியே போனா குளிக்காம வீட்டுக்குள்ள வர மாட்டா!
அப்பறம்....
காபி குடிச்சுட்டு அப்பறம் சொல்லுங்கோ என்றவாறு காபியை கொண்டு வந்து வைத்தாள் சித்ரா. தாத்தாவும் அதை ரசித்து குடிக்கலானார்.

No comments: