சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
553. நீலகேச: -- கறுமையான கேசம் உள்ளவன்,
554. ஸிம்ஹாக்ஷ; - சிம்மத்தின் கண்கள் போல் கண்கள் உடையவன்,
459. ஸர்வவிக்னேச; -- எல்லா தடைகளையும் அகற்றுபவன்.
556. ஸாம வேதபராயண: ஸாம வேதம் ஒதுபவன்.
557 ஸனகாதி முனித்யேய: ஸனகர் முதலிய மனிவர்களால் கருதத்தகுந்தவன் -
558. ஸர்வரீச: - இரவுக்கு ஈசன்
559. ஷடானன: -- ஆறுமுகங்கள் தரித்தவன்.
560. ஸுரூப: -- தல்ல உருவம் உள்ளவன்.
561. ஸுலப:. -- சுலபமானவன்.
562. ஸுவர்க: ஸ்வர்கம் அளிப்பவன்.
563. சசிநாதேன பூஜ்ய: இந்திரனால் பூஜிக்கப்பட்டவன்.
564. காகின: காகினீ தேவிக்குப் பதியானவன்.
565. காமதஹன: காமனைச் சுட்டெரித்தவன்.
566. தக்தபாப: பாபங்களைப் பொசுக்கியவன்.
567. தராதிப: பூமி, மலைகளுக்கு அதிபதியானவன்.
568. தாமக்ரந்தி: கச்சை பட்டை இடுப்பில் தரித்தவன்.
569. சதஸ்த்ரீச: நூறு மனைவிகளைக் கொண்டவன்.
570. தந்தரிபால: தந்திரம் கற்றவர்களைக் காப்பவன்.
571. தாரக: ப்ரணவ உருவமானவன். விடுவிப்பவன்.
572. தாம்ராக்ஷ : சிவந்த கண்களை உடையவன், தாமரை மணிமாலை தரித்தவன்.
573. தீக்ஷ்ண தம்ஷ்ட்ர: கூர்மையான பற்களை உடையவன்.
574. திலபோஜ்ய: எள்ளு சாப்பிடுபவன்.
575. திலோதர: எள்ளு போன்ற வயிறு உள்ளவன்.
576. மாண்டுகர்ண: குண்டலங்கள் அணிந்த காதுகளை உடையவன்.
No comments:
Post a Comment