Pages

Monday, April 13, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 16



 
ௐ கு³ஹாவாஸாய நம: ।குகையில் வசிப்பவனே
ௐ கு³ருவராய நம: ।உயர்ந்த குருவே
ௐ வந்த³நீயாய நம: ।வணங்கத்தக்கவனே
ௐ வதா³ந்யகாய நம: ।வள்ளலே
ௐ வ்ருʼத்தாகாராய நம: ।சந்தஸ் உருவினனே
ௐ வேணுபாணயே நம: । 380புல்லாங்குழல் கையில் கொண்டவனே
ௐ வீணாத³ண்ட³த⁴ராய நம: ।வீணையை தரித்தவனே
ௐ ஹராய நம: ।(பாபங்களை) கொண்டு செல்பவனே
ௐ ஹைமீட்³யாய நம: ।
ௐ ஹோத்ருʼஸுப⁴கா³ய நம: ।ஹோமம் செய்வோருக்கு செல்வத்தை அளிப்பவனே
ௐ ஹௌத்ரஜ்ஞாய நம: ।ஹௌத்ர பிரயோகம் அறிந்தவனே
ௐ ஓஜஸாம்பதயே நம: ।ஒளிகளின் தலைவனே
ௐ பவமாநாய நம: ।சுத்தனே
ௐ ப்ரஜாதந்துப்ரதா³ய நம: ।புத்திரப்பேறு அளிப்பவன்
ௐ த³ண்ட³விநாஶநாய நம: ।தண்டத்தால் சத்துருக்களை நாசம் செய்பவனே
ௐ நிமீட்³யாய நம: । 390கண்களை மூடி இருப்பவனே
ௐ நிமிஷார்த⁴ஜ்ஞாய நம: ।அரை கணத்தில் எல்லாம் அறிபவனே
ௐ நிமிஷாகாரகாரணாய நம: ।
நிமீஷா என்னும் கால அளவுகளுக்கு காரணமானவனே
ௐ லிகு³டா³பா⁴ய நம: ।மஞ்சள் மேனியனே
ௐ லிடா³காராய நம: ।
ௐ லக்ஷ்மீவந்த்⁴யாய நம: ।திருமகளால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ வரப்ரப⁴வே நம: ।வரங்களை அளிக்கும் பிரபுவே
ௐ இட³ஜ்ஞாய நம: ।இடா நாடியை அறிந்தவனே
ௐ பிங்க³லாவாஸாய நம: । பிங்கலா நாடியில் வசிப்பவனே
ௐ ஸுஷும்நாமத்⁴ய ஸம்ப⁴வாய நம: ।சுஷும்னை நாடியில் நடுவில் தோன்றியவனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

376. குஹாவாஸ: (பக்தர்களின் ஹிருதயம் என்னும்) குகையில் வசிப்பவன்.
377. குருவர: உயர்ந்த குருவானவன்.
378. வந்தனிய: எல்லோராலும் வணங்கத் தக்கவன்.
379. வதான்யக: கொடையாளி, வள்ளல்.
380. வ்ருத்தாகார: சந்தஸின் உருவன். நல்ல வடிவினன்.
381. வேணுபாணி: புல்லாங்குழல் தரித்தவன்.
382. வீணாதண்டதர: வீணையைத் தரித்தவன்.
383. ஹர: பாபங்களை அகற்றுபவன்.
384. ஹைமில்ய: ஹைமிலி என்ற மரத்தில் தோன்றியவன்
385. ஹோத்ரு ஸுபக: ஹோமம் செய்கிறவர்களுக்குப்பிரியன். மங்களம் அளிப்பவன். 386. ஹௌத்ரக்ஞ: ரிக் வேதம் அறிந்தவன். ரிக் வேதத்தை ஹௌத்ர சாகை என்று கூறுவர்.
387. ஓஜஸாம்பதி : ஒளிகளுக்கு பதியானவன்,
388. பவமான: வாயுரூபி. சுத்தன்.
389. ப்ரஜா தந்துப்ரத: புத்திரப்பேறு அளிப்பவன்.
390. தண்ட விநாசன: தண்டன் என்பவனைக் கொன்றவன். அல்லது தண்டத்தால் சத்ருக்களை வென்றவன்.
391. நிமீல்ய:மறைந்து இருப்பவன்.
392. நிமிஷார்தக்ஞ: அரை இமை கொட்டும் நேரத்திற்குள் எல்லாவற்றையும் அறிந்தவன்.
393. நிமிஷாகாரகாரண: நிமிடம் முதலிய கால அளவுகளுக்குக் காரணமானவன்.
394. லிகுடாப: மஞ்சள் மேனியன்.
395. லிடாகார: நெருங்கின அங்கங்கள் கொண்ட உருவன்.
396. லக்ஷ்மீ வந்த்ய: லக்ஷ்மியால் வணங்கப்பட்டவன்.
397. வரப்ரபு: அடியவர்கள் வேண்டிய வரங்களை அளிப்பதில் சிறந்தவன்.
398. இடாக்ஞ: பூமிக்குப் பிரேரகன்., இடா என்ற நாடியை அடக்குபவன். வேள்வியில் உள்ள இடா என்ற ஹவிஸை கொண்டவன்.
399. பிங்களாவாஸ: பிங்களன் என்ற ஸேனாபதியோடு வசிப்பவன். பிங்களா என்ற நாடியை அடக்குபவன்.
400. ஸுஷும்னா மத்யசம்பவ : ஸுஷும்னா என்ற நாடியின் நடுவில் உண்டானவன்.

No comments: